இயக்குநரும், நடிகருமான தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா. நடிகராக சில படங்களில் நடித்த உமாபதி, கடந்த ஆண்டு வெளியான `ராஜாகிளி' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இப்போது இவர் அடுத்ததாக ஒரு படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், வடிவுக்கரசி, இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தின் கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்கிறார்.