சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் அமீர் இயக்கி 2002ல் வெளியான படம் `மௌனம் பேசியதே'. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக நடிகர் சூர்யா, நடிகை லைலா ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டனர். தற்போது இப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான த்ரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "என்னுடைய முதல் படம் `மௌனம் பேசியதே' பிப்ரவரி 13ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. கண்டிப்பாக போய் பாருங்கள், மேலும் அதற்கேற்றது போல இது ஸ்பெஷலான காதலர் தின வாரம். இது ஒரு ஸ்பெஷலான படம் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இது எனக்கு முதன் முதலாக வெளியான படம். இங்கிருந்துதான் அனைத்தும் தொடங்கியது. எனது குழுவுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமீர் சார் என்னுடைய முதல் படத்திலேயே உங்களுடன் பணியாற்றியதால் மகிழ்ச்சி. இந்தக் குழுவில் யாரும் என்னை ஒரு அறிமுக நடிகையாக நடத்தவில்லை. குடும்பத்தினருடன் இருந்ததை போல தான் இருந்தது.
என் முதல் படமே சூர்யாவுடன் அமைந்ததில் பெரிய மகிழ்ச்சி. இதில் சிறப்பு என்ன என்றால், என்னுடைய அடுத்த ரிலீசுக்கு சூர்யா உடன் நடித்த படம் (கருப்பு) தான். எனவே ஒரு வட்டத்தை நிறைவு செய்ததாக நான் உணர்கிறேன். இப்படத்தின் மூலம் லைலாவை சந்தித்ததும், அவருடன் நடித்ததும் பெரும் மகிழ்ச்சி. யுவனின் இசை இன்றுவரை இப்படத்தை பிரபலமாகவே வைத்துள்ளது. தயாரிப்பாளர் கணேஷ் சார் இந்த ரீ ரிலீஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என் அன்பை தெரிவிக்கிறேன்." எனக் கூறியுள்ளார் த்ரிஷா.