Trisha  Trisha
கோலிவுட் செய்திகள்

பரவிய திருமண வதந்தி... த்ரிஷா கொடுத்த பதிலடி! | Trisha

என் நம்பிக்குறிய ஒரு நபரை பார்த்த பின்பே திருமண பந்தத்திற்குள் நுழைவேன். வெறுமனே சமூக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை விட, என்னுடைய மகிழ்ச்சி எனக்கு முக்கியம் என்பதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் த்ரிஷா.

Johnson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தென்னிந்திய சினிமாவிலும் பல மொழிகளில் நடித்து வருபவர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வருகிறார். தற்போது சூர்யாவின் `கருப்பு', சிரஞ்சீவியின் `விஸ்வம்பரா' படங்களில் நடித்து முடித்துள்ளார்.  

த்ரிஷா திருமணம் குறித்து பல முறை வதந்திகள் வருவதும், அதை அவர் மறுப்பதும் மிக வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. மேலும் எனக்கு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவரசமும் இல்லை. ஒருவேளை எனக்கு திருமணமே நடக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. என் நம்பிக்குறிய ஒரு நபரை பார்த்த பின்பே திருமண பந்தத்திற்குள் நுழைவேன். வெறுமனே சமூக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை விட, என்னுடைய மகிழ்ச்சி எனக்கு முக்கியம் என்பதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் த்ரிஷா. ஆனாலும் அவரின் திருமண வதந்திகள் நின்றபாடில்லை.

Trisha

இப்போது மீண்டும் தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு திருமணம் என வதந்திகள் பரவியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.