R J Balaji, Vijay Karuppu
கோலிவுட் செய்திகள்

அன்று யாரும் நம்பவில்லை... இன்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்! - ஆர் ஜே பாலாஜி | R J Balaji

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. யாரும் அவரை நம்பவில்லை.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு' பட Pre-Release நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வி பேசிய ஆர் ஜே பாலாஜி "இரண்டு ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. யாரும் அவரை நம்பவில்லை. பலரும் அவர் மீது எதிர்மறை கருத்துக்களை பரப்பினர். ஆனால் அந்த மனிதர் அவரை நம்பினார். அவர் சிந்தனைகளுடனும், கனவுகளுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் விடாமுயற்சியுடன் இருந்தார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

Vijay

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். இரண்டு ஆண்டுகள் முன் அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால், அவரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கை கோடிக்கணக்கான வாக்குகளாக மாறியது. உங்களுக்கும் இங்கு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பவன் கல்யாண் அவர்கள். மக்கள் ஒருவரை நம்பும்போது அது பெரிய ஆற்றலாக மாறும்" என்றார்.