H Vinoth Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

”ஜனநாயகனில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை!” - ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan

விஜய் சார் முதல்வராவார் என யாரும் சொல்லவில்லை. நானும் அப்போது அப்படி நினைக்கவில்லை. அவர் தேர்தலில் வெற்றி பெற்றதே பயங்கரமான விஷயம். அவர் வெற்றியை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம்.

Johnson

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஜனநாயகன்'. இப்படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச். வினோத். அதில், "எனக்கு இது கனவுபோல இருக்கிறது. அப்போது விஜய் சார் முதல்வராவார் என யாரும் சொல்லவில்லை. நானும் அப்போது அப்படி நினைக்கவில்லை. அவர் தேர்தலில் வெற்றி பெற்றதே பயங்கரமான விஷயம். அவர் வெற்றியை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம்.

அனுபவமாகவே இத்தனை தருணங்கள், இவ்வளவு குறைவான நேரத்தில் நடந்தது கிடையாது. இது தேர்தலுக்கு முன்பு எடுத்த திரைப்படம். இப்போது படத்தில் அதே கன்டென்ட்தான் இருக்கிறது. அதனை மாற்ற முடியாது. சென்சாரில் அதற்கு அனுமதிக்கவில்லை. படத்தினுடைய கருத்தில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். அதனால் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. லீக் ஆன வெர்ஷனிலிருந்து, இந்தப் படத்தில் புதிய விஷயங்கள் நேச்சுரலாகவே அமைந்திருக்கின்றன. நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள். அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்ப்பார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் விஜய் சாரைப் பார்க்க வேண்டும் என நினைத்து தியேட்டருக்கு வர வேண்டும். 'ஜன நாயகன்' வெறும் கமர்ஷியல் திரைப்படம் மட்டும் கிடையாது. இதில் தவெக புகழ் பாடும் விஷயங்கள் மட்டும் கிடையாது. இதில் சென்சிடிவ்வான அரசியலைப் பேசியிருக்கிறோம். அந்தக் கன்டென்டைப் பார்த்து விவாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" எனப் பகிர்ந்திருக்கிறார்.