Cibi Chakaravarthy Thalaivar 173
கோலிவுட் செய்திகள்

`தலைவர் 173' | மீண்டும் இயக்குநர் மாற்றமா? சிபி சக்கரவர்த்தி விலகல்? இவர்தான் புது இயக்குநர்?

முதலில் `தலைவர் 173' படம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அடுத்த சில தினங்களில் இப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார்.

Johnson

`ஜெயிலர் 2' படத்தை முடித்த பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் `தலைவர் 173' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இப்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது `தலைவர் 173'யில் மீண்டும் ஒரு மாற்றம் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. முதலில் `தலைவர் 173' படம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அடுத்த சில தினங்களில் இப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். 

Rajinikanth, Cibi

பின்னர் இப்படத்துக்கு இயக்குநர் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்தது. பலரிடம் கதை கேட்கப்பட்டது. அதில் சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டு, அதன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடித்த கையோடு இந்தப் படத்தை துவங்குவார் எனவும், ஏப்ரல் இறுதியில் புரமோ படப்பிடிப்போடு `தலைவர் 173' துவங்கும் என தகவல்கள் வந்தது. இப்படம் பற்றி சில மேடைகளில் பேசிய இயக்குநர் சிபியும் இது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான பொழுது போக்கு படமாக இருக்கும் எனவும் உறுதி தெரிவித்தார். இப்போது இந்தப் படத்திலிருந்து சிபியும் வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன.

விலுகிறாரா சிபி சக்கரவர்த்தி..?

`தலைவர் 173' பட வாய்ப்புக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார் சிபி, அது தாமதமாகி கொண்டே இருக்க தெலுங்கில் ஒரு நிறுவனத்திலும் கமிட் ஆனார். இப்போது `தலைவர் 173' படத்தை இயக்குவதற்கு தடையாக இது போன்ற முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

Rajinikanth

இதே வேளையில் `தலைவர் 173' படத்தை இயக்குவது யார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. `ஓ மை கடவுளே', `டிராகன்' என இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்த அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே `தலைவர் 173'-க்கான தேடுதல் வேட்டை நடந்த சமயத்தில் அஷ்வத்தும் ரஜினிக்கு கதை சொன்னார். அவர் சொன்ன கதை ரஜினிக்கும் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட அவர் தான் இயக்குநர் என முடிவான சமயத்தில் சிபி பெயர் அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு அஷ்வத்திடம் சென்றுள்ளது. வெள்ளிக்கிழமையே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது எனவும் மிக விரைவில் இப்படம் அறிவிக்கப்பட உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.