Sinduri Vishal, Senthuzhan Kottattum Parai
கோலிவுட் செய்திகள்

தமிழ் - ராப் பாடலில் மரபுகளை பேசும் `கொட்டட்டும் பறை' | Sinduri Vishal

இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளின் ஒலி, உலக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான ஒரு நுழைவாயிலை உருவாக்கவுள்ளனர்.

Johnson

இந்திய பாரம்பரிய இசையை ஆவணப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ளது Raahein Gharana. இந்த அமைப்பின் ரிதமிக் ரூட்ஸ் தொகுதியில் 8வது பாடல், ‘கொட்டட்டும் பறை’ வெளியாகி இருக்கிறது. பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளை நம்பகத்தன்மை சேர்த்து பகிரக்கூடிய அனுபவங்களாக மாற்றும் ஒரு முயற்சியாக Raahein Gharana செயல்படுகிறது.

இந்த முயற்சிகளின் மூலமாக தெளிவற்ற, பழமையான மற்றும் கண்டறியப்படாதவற்றை உலகளாவிய வெளிச்சத்திற்குக் கொண்டுவர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளின் ஒலி, உலக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான ஒரு நுழைவாயிலை உருவாக்கவுள்ளனர்.

தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் ஆவணப்படுத்த உள்ள ரிதமிக் ரூட்ஸ், இதுவரை ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், கேரளா, ஹரியானா, காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தனது கலைப்பயணத்தை தொடங்கியது. அதன்படி ரிதமிக் ரூட்ஸில், ‘கொட்டாட்டும் பறை’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. செந்துழான் மற்றும் சிந்தூரி விஷால் ஆகியோரின் தமிழ் ராப் பாடலான, ‘கொட்டட்டும் பறை’, பண்டைய மரபுகளை நவீன ஒற்றுமைகள் பற்றிப் பேசுகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து இன்னும் மீதமுள்ள மற்ற மாநிலங்களுக்கும் இந்தப் பதிவுகளைச் செய்ய இருக்கின்றனர்.