நாயகன்
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இன்று வரை க்ளாசிக் என கொண்டாடப்படும் படம் `நாயகன்'. கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷலாக நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. இதற்காக புதிதாக கிரேடிங் செய்து படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம். படத்தின் ரீ ரெக்கார்டிங் வரை மீண்டும் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல். கண்டிப்பாக மறக்க முடியாத திரை அனுபவமாக நாயகன் அமையும்.
ஆட்டோகிராஃப்
சேரன் இயக்கி நடித்து உருவாக்கிய படம் `ஆட்டோகிராஃப்'. ஒரு மனிதனின் Coming of the age படமாக பலரையும் கவர்ந்த படம் இது. புத்தம் புதிதாக படத்தை டிஜிட்டல் செய்து, டால்பி சவுண்ட் சேர்த்து தயாராகி இருக்கிறது. இதனை நவம்பர் 14ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
ப்ரண்ட்ஸ்
விஜய் - சூர்யா நடிப்பில் சித்திக் இயக்கிய படம் `ப்ரண்ட்ஸ்'. இப்படம் டால்பி அட்மாஸ் ஒலியுடன் 4K தரத்தில் தயார் செய்திருக்கிறார்கள். `கில்லி', `சச்சின்', `குஷி' படங்களை தொடர்ந்து விஜயின் `ப்ரண்ட்ஸ்' படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
அஞ்சான்
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் `அஞ்சான்'. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தை இப்போது புதிதாக எடிட் செய்து ரீ ரிலீசுக்கு தயார் செய்து வருகிறார்கள். இப்படம் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.