தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக `கருப்பு', `விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய இரு படங்கள் வெளியாக தயாராக இருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில தாமதங்களால் அது நடக்காமல் போனது. அதன்பின் இப்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருக்கிறது. `கருப்பு' வெளியாகாததால், வெங்கி அட்லூரி `விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸும் முடிவாகாமலே இருந்தது.
இப்போது இந்த சிக்கல்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. `கருப்பு' வெளியாகும் முன் `விஸ்வநாத் & சன்ஸ்' படம் வருவது பாதிப்பாக அமையும் என்பதால் சூர்யாவின் தரப்பே `விஸ்வநாத் & சன்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் பேசி இருப்பதாகவும், அதன் பொருட்டு முதலில் `கருப்பு' படத்தை மே மாதம் வெளியிட உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி கருப்பு படம் தேர்தல் முடிந்த பின்னர் வெளியாகும் என கூறினார்.
இதற்கு அடுத்து `விஸ்வநாத் & சன்ஸ்' ஜூலை மாதம் வெளியாகும். இதனை உறுதிசெய்யும் விதமாக சமீபத்தில் `விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அதிலேயே ஜூலை வெளியீடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அடுத்ததாக சூர்யா தற்போது ஜீத்து மாதவன் இயக்கும் `சூர்யா 47' படத்தில் நடித்து வருகிறார்.