Karuppu Suriya
கோலிவுட் செய்திகள்

ரசிகர்களுக்கு சூர்யாவின் தீபாவளி பரிசு! | Karuppu | Suriya

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இதில் ஆர் ஜே பாலாஜியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியானது. இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இதுபற்றி சமீபத்தில் பேசிய ஆர் ஜே பாலாஜி "படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என நினைத்தோம். ஆனால் படத்தில் நிறைய சி ஜி காட்சிகள் செய்ய நேரம் தேவைப்படுவதால் முடியாமல் போனது.

படத்தின் முதல் சிங்கிள், தீபாவளிக்கு வெளியாகும்" எனக் கூறிஇருந்தார். அதன்படி அக்டோபர் 20ம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ்.