Anjaan, Padayappa, Vaa Vaathiyaar, Arya 40, Genelia, The Drama Top 10 Cinema News
கோலிவுட் செய்திகள்

அஞ்சான் ரீ-எடிட் பார்த்த சூர்யா To தள்ளிப்போன வா வாத்தியார் | Top 10 Cinema News | Anjaan | karthi

இன்றைய சினிமா செய்திகளில் `அஞ்சான்', `வா வாத்தியார்', ஜெனிலியா கமெண்ட் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.

Johnson

`அஞ்சான்' ரீ-எடிட் பார்த்த சூர்யா!

சூர்யா நடித்து லிங்குசாமி இயக்கிய `அஞ்சான்' படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு நவம்பர் 28 ரீ ரிலீஸ் ஆனது. இப்படத்தை நேற்று ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார் சூர்யா. 

இது POSTPONED மாதம்!

கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்', அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள `லாக்டவுன்' ஆகிய படங்கள் டிசம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தள்ளிப்போகிறது. மேலும் டிசம்பர் 18 வரும் என சொல்லப்படும் `LIK' படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி போகும் என சொல்லப்படுகிறது.

Padayappa Trailer

ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (டிச 12) ரஜினிகாந்தின் படையப்பா ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதற்காக படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ARYA 40 POOJAI

ஆர்யாவின் 40வது பட பூஜை இன்று ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. இப்படத்தை நிகில் முரளி இயக்குகிறார்.

சச்சின் போஸ்டில் ஜெனிலியா கமெண்ட்

விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் `சச்சின்'. இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த இரு தினங்களாக விஜய், ஜெனிலியா நடித்த பாத்திரங்களான சச்சின் மற்றும் ஷாலினி இன்றைய காலகட்டத்தில் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக மீண்டும் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும் என ஏ ஐ பயன்படுத்தி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த போஸ்டுக்கு கீழே நடிகை ஜெனிலியா, `இப்படத்தை உடனடியாக பார்க்க விரும்புகிறேன்' என கமெண்ட் செய்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும்...

ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் `Pakashala Pantham' படம் துவங்கியுள்ளது. கரண் இயக்கும் இப்படத்தில் மஹத் மற்றும் சஞ்சஜ் ஸ்வரூப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Bha Bha Ba Trailer 

திலீப் நடித்துள்ள `BHA BHA BA' பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. மோகன் லால் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 18 வெளியாகவுள்ளது.

நேற்று விமர்சனம், இன்று புகழ்ச்சி

Hrithik Roshan

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் `துரந்தர்' படத்தின் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என நேற்று இன்ஸ்ட்டாவில் பதிவிட்டார். அதற்கு பல எதிர்வினைகள் கிளம்பியது. இன்று படத்தில் நடித்த நடிகர்களை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே நபர், ஒரு படத்தை விமர்சித்தும், புகழ்ந்தும் பதிவிட்டது பேசு பொருளானது. 

The Drama Teaser

Kristoffer Borgli இயக்கத்தில் Zendaya, Robert Pattinson நடித்துள்ள `The Drama' பட டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

Avatar: The Last Airbende Season 2 

Avatar: The Last Airbender லைவ் ஆக்ஷன் தொடரின் இரண்டாவது சீசன் டீசர் வெளியாகியுள்ளது. இந்த சீசன் அடுத்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.