Suriya Vishwanath and Sons
கோலிவுட் செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியது | Suriya | Vishwanath and Sons

குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Johnson

சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கான முன்பதிவு இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கிய இந்த குடும்ப உணர்ச்சி படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் மூலம் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் பாடல்கள், டீசர்ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

சூர்யா நடிப்பில் சமூகத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் சுதந்திர தினத்தை ஒட்டி வெளியாகும் படம் என்பதால், தொடர் விடுமுறை நாட்கள் படத்தின் வசூலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.