Suriya, Chiranjeevi Education
கோலிவுட் செய்திகள்

"சூர்யா எனக்கு இன்ஷ்பிரேஷன்!" - நெகிழ்ச்சியாக சொன்ன சிரஞ்சீவி | Suriya | Chiranjeevi

எதிர்காலத்தில், ஏழை மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்தக் குடும்பம் முழுவதுமே ஒரு நல்ல நிலையில் இருக்கும். இந்த எண்ணத்திற்கு, காரணம் நடிகர் சூர்யா.

Johnson

2025ஆம் ஆண்டுக்கான ‘தெலங்கான கட்டர் திரைப்பட விருதுகள்’ (Telangana Gaddar Film Awards) வழங்கும் விழா  உகாதி தினமான நேற்று மாலை நடைபெற்றது. இதில் சினிமாவில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக NTR National Award நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றதற்காக அவர் அளித்த பேட்டியில் தன் மக்கள் நலப்பணிகளில் எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து தெரிவித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் சிரஞ்சீவி, "எதிர்காலத்தில், ஏழை மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்தக் குடும்பம் முழுவதுமே ஒரு நல்ல நிலையில் இருக்கும். இந்த எண்ணத்திற்கு, காரணம் நடிகர் சூர்யா. அவர் தமிழ்நாட்டில்கூட பல சந்தர்ப்பங்களில் ’அகரம்’ என்ற அமைப்பை துவங்க சிரஞ்சீவிதான் காரணமும் உத்வேகமும் என்று கூறி இருக்கிறார். கல்விக்காக அவர் செய்யும் நலப்பணிகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. நான் அவரிடம், `ஒரு காலத்தில் நான் உங்களுக்கு இன்ஷ்பிரேஷனாக இருந்தேன், இப்போது நீங்கள் எனக்கு இன்ஷ்பிரேஷன் ஆகிவிட்டீர்கள்' என கூறுவேன்.

Chiranjeevi, Suriya, Allu Arjun

ஆந்திரப் பிரதேசம்/தெலங்கானா மாநிலங்கள் மற்றும் பிற இடங்களிலும் உள்ள ஏழை மக்களுக்கும், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கும் கல்விக்கான எனது சேவையை வழங்க, உங்களிடமிருந்து இந்தச் செயல்முறையைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனவே என் எதிர்கால திட்டம் ஏழை மற்றும் தேவை உள்ள நபர்களுக்கு கல்வி அளிப்பதாகும்" எனப் பேசியுள்ளார்.