Suriya Politics
கோலிவுட் செய்திகள்

அரசியலில் சூர்யா? சர்ச்சை பேச்சும்... வெளியான அறிக்கையும்! | Suriya

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆனால். அவரது உரையை தவறான விளக்கத்துடன் பரப்பி அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இரா.வீரமணி பேசுகையில் "காலம் முடிவு செய்துவிட்டால், கடவுள் முடிவு செய்துவிட்டால் மக்கள் தலைவன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது" எனப் பேசி இருந்தார்.  இந்த வீடியோவை பகிர்ந்து சூர்யா அரசியலுக்கு வர இருக்கிறாரா என்ற வகையில் பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்து இரா.வீரமணி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு.இரா.வீரமணி அவர்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆனால். அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு.இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு.R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு.G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். எனவே ,சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல். மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.