Suriya, Nazriya Suriya 47
கோலிவுட் செய்திகள்

`புறநானூறு' ஜோடி, போலீஸாக சூர்யா? துவங்கிய PROMO ஷூட்! | Suriya 47 Update | Jithu Madhavan

`கருப்பு' படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டது என்றாலும், சில பேட்ச் ஒர்க் வேலைகள் நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தின் ரிலீஸ் வேலைகள் வேகமெடுக்கும்.

Johnson

சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் `SURIYA 47' நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. `ஆவேசம்' படம் மூலம் கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் இப்படத்தை இயக்குகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சூர்யாவின் அடுத்த படமாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு' வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து சூர்யா 46 படத்தை `லக்கி பாஸ்கர்' வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த சூழலில் தான் `SURIYA 47' வெளியாகி இருக்கிறது.

சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்க உள்ளார். திருமணத்திற்கு பிறகு மிகக் குறைவான படங்களிலேயே நடித்து வரும் நஸ்ரியா, இப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது கவனிக்க வைக்கிறது. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்ன என்றால், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த `புறநானூறு' படத்தில் நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. அப்படம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இந்த ஜோடி `SURIYA 47' மூலம் இணைந்துள்ளது. மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நஸ்லென் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மலையாளத்தில் `Kumbalangi Nights', `Minnal Murali', `Romancham', `Manjummel Boys', `Aavesham' எனப் பல படங்களில் தன் இசையால் கவனம் ஈர்த்த சுஷின் ஷ்யாம் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் ஆக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ழகரம் ஸ்டுடியோஸ் (Zhagaram Studios) தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின், பூஜை முடிந்த கையோடு, புரோமோ படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

`கருப்பு' படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டது என்றாலும், சில பேட்ச் ஒர்க் வேலைகள் நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தின் ரிலீஸ் வேலைகள் வேகமெடுக்கும். வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தை மே மாதம் வெளியிட திட்டமிடுவதால், அதற்கு முன்பு `கருப்பு' ரிலீஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி வரும் என நம்பலாம். எப்படியோ `கருப்பு', வெங்கி அட்லூரி படம், ஜித்து மாதவன் படம் என சூர்யாவின் அடுத்த படங்கள் எல்லாம் பெரிய நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. சூர்யாவுக்கு இது கம்பேக் சீசன் என்றே சொல்லலாம்.