Bison Rajinikanth, Mari Selvaraj
கோலிவுட் செய்திகள்

"உங்கள் உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது!" - மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த் | Bison | Rajinikanth

பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னை தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றி.

Johnson

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. பொதுவாக ஒரு படம் பாராட்டப்படும் போது, அதனை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்துவது தவறாமல் நடைபெறுவது. அப்படி பைசன் படத்துக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் "'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன், படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.

இதனைப் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்த மாரி செல்வராஜ் "பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்த் - மாரி செல்வராஜ் கூட்டணியில் படம் உருவாகும் ப்ராசஸ் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது எனவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார் மாரி செல்வராஜ்.