STR49 Simbu, Vetrimaaran
கோலிவுட் செய்திகள்

STR 49 புரோமோ எப்போது? தயாரிப்பாளர் தாணு தந்த அப்டேட் | Simbu | Vetrimaaran | Thanu

செப் 4ம் தேதி `STR 49' பட புரமோ டீசர் வெளியானது, முழு புரோமோ எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று அதற்கான விடையை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.

Johnson

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் `STR 49'. விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யாவின் `வாடிவாசல்' படத்தை வெற்றி இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் 30ம் தேதி தன்னுடைய அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார் எனவும், இப்படத்தை தாணு தயாரிக்கிறார் எனவும் வீடியோ வெளியிட்டு அறிவித்தார். மேலும் இப்படம் வடசென்னை 2ம் பாகம் இல்லை, ஆனால் வடசென்னை உலகில் நடக்கும் ஒரு கதை எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் 50வது பிறந்தநாளான செப் 4ம் தேதி `STR 49' பட புரமோ டீசர் வெளியிட்டார். வெறும் டீசர் மட்டும் வெளியானதால், முழு புரோமோ எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று அதற்கான விடையை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. இந்த பதிவில் புரோமோவுக்கான டப்பிங்கை சிம்பு பேசுவது போலவும், உடன் இயக்குநர் வெற்றிமாறன் இருப்பது போலவும் புகைப்படங்கள் இடம் பெற்றது.

அதில் `STR 49' படத்தின் புரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதைப் போலவே அதிகம் எதிர்பார்க்கப்படும் இன்னொரு வெற்றிமாறன் படம் `வடசென்னை 2' இப்படம் அடுத்த ஆண்டு உருவாகும் என பல மேடைகளில் வெற்றிமாறன் கூறியுள்ளார். அதனை உறுதி செய்யும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன், `இட்லி கடை' இசை வெளியீட்டு விழாவில் `வடசென்னை 2' படத்தை தான் தயாரிப்பதாக அறிவித்தார். மதுரையில் நடந்த `இட்லி கடை' ப்ரீ ரிலீஸ் நிகழ்வில், `வடசென்னை 2' அடுத்த ஆண்டு (2026) துவங்கும் எனவும், அதற்கடுத்த ஆண்டு (2027) வெளியாகும் எனவும் அறிவித்தார் தனுஷ்.