Soori x page
கோலிவுட் செய்திகள்

ஹீரோவாக சூரியின் 7ஆவது படம்... இயக்குநர் யார் தெரியுமா? | Soori | Mythri Movie Makers

`கருடன்', `கொட்டுக்காளி', `விடுதலை 2', `மாமன்' போன்ற படங்களில் நாயகனாக நடித்து நல்ல நல்ல வரவேற்பைப் பெற்றார் சூரி.

Johnson

சினிமாவுக்குள் காமெடியனாக வந்து, இப்போது பரபரப்பான ஹீரோவாக வளர்ந்திருப்பவர் சூரி. வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்திற்குப் பிறகு `கருடன்', `கொட்டுக்காளி', `விடுதலை 2', `மாமன்' போன்ற படங்களில் நாயகனாக நடித்து நல்ல நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது `மண்டாடி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது இவர் நாயகனாக நடிக்கவுள்ள 7ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை `இன்று நேற்று நாளை', `அயலான்' படங்களை இயக்கிய ஆர். ரவிகுமார் இயக்கவுள்ளார். `குட் பேட் அக்லி', `ட்யூட்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது தமிழ்ப் படமாக இப்படத்தைத் தயாரிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

இப்படத்தின் அறிவிப்பிலேயே, இது ஒரு வன்முறையான படம் என்பதை உணர்த்தும்விதமாக ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மதிமாறன் இயக்கத்தில் ’மண்டாடி’ படத்தில் நடித்து வரும் சூரி, அதனை முடித்தபின் இப்படத்தில் இணையவுள்ளார்.