Sirai, 45, Goodbye June, ST, Mark This Week's Release
கோலிவுட் செய்திகள்

விக்ரம்பிரபுவின் `சிறை' to கேத் வின்ஸ்லெட் இயக்கிய `Goodbye June' | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்

இந்த வாரம் ஓடிடியில் `Goodbye June' மற்றும் தியேட்டரில் விக்ரம் பிரபுவின் `சிறை' முதல் கிச்சா சுதீப்பின் 'Mark' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Stranger Things S5 Vol2 (English) Netflix - Dec 25

ST

Stranger Things சீரிஸின் கடைசி சீசன் தான் இந்த 5வது சீசன். கடைசி சீசனின் முதல் பாக எப்பிசோடுகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இப்போது அடுத்த மூன்று எப்பிசோட் வெளியாகிறது. கடைசி எப்பிசோட் டிசம்பர் 31 வெளியாகவுள்ளது.

OTT: Goodbye June (English) Netflix - Dec 24

Goodbye June

பிரபல ஹாலிவுட் நடிகை கேத் வின்ஸ்லெட் இயக்குநராக அறிமுகமாகும் படம் `Goodbye June'. நான்கு சகோதர சகோதரிகள், நோய்வாய்ப்பட்ட அவர்களின் அம்மா இவர்கள் வாழ்வில் கிறிஸ்துமஸ் அன்று நடப்பது என்ன என்பதே கதை.

Post Theatrical Digital Streaming: Middle Class (Tamil) Zee5 - Dec 24

Middle Class

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள படம் `மிடில் க்ளாஸ்'. ஒரு நடுத்தர குடும்பத்து வாழ்க்கையில் வரும் சிக்கல்களே கதை.  

Nidhiyum Bhoothavum (Malayalam) Sun NXT - Dec 24

Nidhiyum Bhoothavum

சாஜன் ஜோசப் இயக்கிய படம் `Nidhiyum Bhoothavum'. தங்களின் மெக்கானிக் ஷாப்பை இடம் மாற்றிய பிறகு அதை நடத்தும் நண்பர்கள் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களே கதை.

Andhra King Taluka (Telugu) Netflix - Dec 25

Andhra King Taluka

மகேஷ்பாபு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, பாக்ய ஸ்ரீ, உபேந்திரா நடித்த படம் `Andhra King Taluka'. தன் ஆதர்சன நாயகனுக்காக ஒரு ரசிகன் செய்யும் விஷயங்களே கதை.  

Ek Deewane Ki Deewaniyat (Hindi) Zee5 - Dec 26

Ek Deewane Ki Deewaniyat

மைலாப் ஸாவேரி இயக்கிய படம் `Ek Deewane Ki Deewaniyat'. விக்ரமாதித்யா - அடா இடையேயான காதலே கதை.

Theatre: Retta Thala (Tamil) - Dec 25

Retta Thala

கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் `ரெட்ட தல'. இரட்டை சகோதரர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது படம்.

Sirai (Tamil) - Dec 25

Sirai

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, LK அக்ஷய்குமார் நடித்துள்ள படம் `சிறை'. ஒரு கைதியை நீதி மன்றத்துக்கு அழைத்து செல்லும் காவலரின் கதை.

Shambhala (Telugu) - Dec 25

Shambhala

ஆதி நடித்துள்ள படம் `Shambhala'. சம்பலா என்ற கிராமத்தின் மர்மத்தை கண்டறி முயற்சிக்கும் ஒருவனின் கதை.

Champion (Telugu) - Dec 25

Champion

ரோஷன் - அனஸ்வரா நடித்துள்ள படம் `Champion'. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் சிக்கந்தராபாத்தில் கால்பந்து வீரனாக ஆசைப்படும் இளைஞனின் கதை.

Dhandoraa (Telugu) - Dec 25

Dhandoraa

சிவாஜி, நவதீப், பிந்து மாதவி நடித்துள்ள படம் `Dhandoraa'. எமோஷனல் குடும்ப படமாக உருவாக்கியுள்ளது.

Sarvam Maya (Malayalam) - Dec 25

Sarvam Maya

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி, அஜூ வர்கீஸ் நடித்துள்ள படம் `Sarvam Maya'. ஒரு இந்து இளைஞன், பேயை பார்த்த பின்பு நடக்கும் விஷயங்களே படம்.

Vrusshabha (Malayalam) - Dec 25

Vrusshabha

மோகன்லால் நடித்துள்ள படம் `Vrusshabha'. தந்தை - மகன் பாசம், பூர்வ ஜென்ம நினைவு போன்றவற்றை சொல்லும் படம்.

Mark (Kannada) - Dec 25

Mark

கிச்சா சுதீப் நடித்துள்ள படம் `Mark'. சஸ்பெண்ட் ஆன காவலர் அஜய் மார்கண்டேயா, தன் எதிரிகளை எப்படி அழித்தார் என்பதே கதை.

45 (Kannada) - Dec 25

45

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம் `45'. ஃபேன்டசி படமாக உருவாகியிருக்கிறது.

Tu Meri Main Tera Main Tera Tu Meri (Hindi) - Dec 25

Tu Meri Main Tera Main Tera Tu Meri

கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே நடித்துள்ள படம் `Tu Meri Main Tera Main Tera Tu Meri'. குடும்ப அழுத்தத்தால் பிரிந்த காதலர்கள், அதன் பின் என்ன செய்தார்கள் என்பதே கதை.

Anaconda (English) - Dec 25

Anaconda

Tom Gormican இயக்கியுள்ள படம் `Anaconda'. 97ல் வெளியான அனகோண்டா படத்தின் மெட்டா - ரீபூட்டாக உருவாகியுள்ளது.