Simbu, Ken Karunas Youth
கோலிவுட் செய்திகள்

'யூத்' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய சிம்பு! | Simbu | Youth

படத்தின் முதல் நாள் இந்த அளவில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று படக்குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் 4 நாட்களில் உலக அளவில் படம் 28.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தனர்.

Johnson

கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்'. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா, மீனாக்ஷி, ப்ரியான்ஷி எனப் பலரும் நடித்திருந்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Youth

இப்படத்தின் வசூலும் நல்ல வகையில் வந்து கொண்டிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்து வருகிறது படம். படத்தின் முதல் நாள் இந்த அளவில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று படக்குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் 4 நாட்களில் உலக அளவில் படம் 28.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தனர். படத்தைப் பார்த்த திரைபிரபலங்களும் பாராட்டினர்.

இப்படக்குழுவை நடிகர் சிம்பு நேரில் அழைத்துப் பாராட்டிய புகைப்படங்கள் இன்று வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லரையும் பாராட்டி சிம்பு பதிவிட்டிருந்தார். இதில் சிறப்பு என்ன என்றால், இப்படத்தின் நடிகரும் இயக்குநருமான கென், சிம்புவின் ரசிகர் என்பதைப் பல இடங்களில் கூறியுள்ளார்.

Simbu, Ken Karunas

மேலும், இப்படத்தில் அவர் ஒரு சிம்பு ரசிகராகதான் வந்திருப்பார். இந்த நிலையில் சிம்புவே அவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பாராட்டுகளைக் குவிக்கும் அதே வேளையில் படம் வசூலையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.