Suriya, Simbu - Suriya 47 web
கோலிவுட் செய்திகள்

சூர்யா படத்தில் இணையும் சிம்பு? பரவி வரும் தகவல்! | Suriya 47 | Simbu

ஜித்து மாதவன் இதற்கு முன்பு `ரோமாஞ்சம்', `ஆவேஷம்' என மலையாளத்தில் இரு ஹிட் படங்களை கொடுத்தார். எனவே `சூர்யா 47' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Johnson

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47' படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் இணைவார் என தகவல் பரவி வருகிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்பு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது. சிம்பு, சூர்யா இணையும் முதல் படம் இது ஆகும்.

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கிவரும் படம் `சூர்யா 47'. இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படம் மூலம் பெரிய இடைவெளிக்குப் பின் சூர்யா மீண்டும் போலீஸ் பாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்து மாதவன் இதற்கு முன்பு `ரோமாஞ்சம்', `ஆவேஷம்' என மலையாளத்தில் இரு ஹிட் படங்களை கொடுத்தார். எனவே `சூர்யா 47' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Suriya 47

இப்போது இந்தப் படத்தில் இன்னொரு நடிகர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தின் க்ளைமாக்சில் ஒரு முக்கியமான பாத்திரம் வர இருக்கிறது. அதில் நடிக்க முடியுமா என சிம்புவை இயக்குநர் அணுகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் அடுத்த பாகத்தில் இந்த முக்கியமான பாத்திரமும் சூர்யாவுடன் இணைந்து பயணிக்குமாம். சிம்பு `ஆவேஷம்' பட இயக்குநர் என்பதால், அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறாராம்.

ஆனாலும், இப்படத்தில் சிம்பு பாத்திரத்தின் ஸ்க்ரிப்ட் முடித்துவிட்டு தருகிறேன், அதை படித்துவிட்டு பிடித்திருந்தால் சம்மதம் சொல்லுங்கள் என தெரிவித்துள்ளாராம் இயக்குநர் ஜித்து மாதவன். ஒருவேளை எல்லாம் சரியாக நடந்தால் முதன் முறை சூர்யா, சிம்பு இணையும் படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. சூர்யாவின் `கருப்பு' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இதற்கடுத்ததாக `சூர்யா 47' வெளியாக உள்ளது.