Dhanush, Ajith D54, Velpari
கோலிவுட் செய்திகள்

ஷங்கரின் வேள்பாரி to மீண்டும் இணைந்த மம்மூட்டி - அடூர்! | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Shankar

இன்றைய சினிமா செய்திகளில் ஷங்கரின் `வேள்பாரி', தனுஷின் `D54', `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

Johnson

மீண்டும் விளம்பரப் படங்களில் அஜித்?

Ajith

நடிகர் அஜித்குமார் பல வருடங்களாக விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் அவர் விளம்பரப் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் எனவும், அதன் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார் எனவும் தகவல்.

துவங்குகிறது வேள்பாரி திரைப்படம்!

Velpari

`வேள்பாரி' நாவலை திரைப்படமாகும் முயற்சிகளில் இருந்த ஷங்கர், அப்படத்தை 2026 ஜூன் மாதம் துவங்க உள்ளதாகவும், பெரிய நட்சத்திர நடிகர் இதில் நடிக்கிறார் எனவும் தகவல்.

D54 ஷூட்டில் இணைந்த தனுஷ்

D54

தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கிவரும் D54 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் `தேரே இஷக் மே' படம் சமீபத்தில் வெளியானதால், அதன் புரமோஷன்களில் கலந்து கொண்டார். இப்போது அந்த வேலைகள் முடிந்துவிட்டதால் மீண்டும் D54 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

`வா வாத்தியார்' புது ரிலீஸ் தேதி!

Vaa Vaathiyaar

கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' பட இரண்டாவது பாடல் MuDhaLaLi வெளியீடு. இப்படம் டிசம்பர் 5 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என புது ரிலீஸ் தேதி அறிவிப்பு.

விமலின் `மகாசேனா' டிரெய்லர்

விமல் நடிப்பில் தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ள `மகாசேனா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

வாரிசு இயக்குநரின் அடுத்த படம்?

Salman Khan

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. தமிழில் விஜய் நடித்த `வாரிசு' படத்தை இயக்கினார். அடுத்ததாக இவர் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல் உலவி வருகிறது.

ஹீரோவான சத்யா

Jetlee

தெலுங்கு காமெடி நடிகர் சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் `Jetlee'. Mathu Vadalara இரு பாகங்களை இயக்கிய ரிதேஷ் ராணா இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

Mowgli Trailer

ரோஷன் நடிப்பில் சந்தீப் ராஜ் இயக்கியுள்ள `Mowgli' படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

துடரும் காம்போ!

மோகன் லால் - தருண் மூர்த்தி கூட்டணி `துடரும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளது. 

மீண்டும் இணைந்த அடூர் - மம்மூட்டி

Mammootty, Adoor

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி `அனந்தரம்', `மதிலுகள்' மற்றும் `விதேயன்' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைகிறது. இப்படத்தை மம்மூட்டி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலம் தயாரிக்கிறார்.