Ashwath Marimuthu STR 51
கோலிவுட் செய்திகள்

"சிம்பு - சந்தானம் காம்போ CONFIRM!" - அஷ்வத் சொன்ன அப்டேட் | Simbu | Ashwath Marimuthu

இந்தக் கதை (STR 51) சொர்க்கம் என்றால் என்ன என்பதைப் பற்றியது. அதை கருத்து திணிப்பாக இல்லாமல் படத்தில் சொல்ல இருக்கிறோம்.

Johnson

`ஓ மை கடவுளே', `டிராகன்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் அடுத்தாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கும் ’அரசன்’ படத்தில் நடிக்கும் சிம்பு அடுத்ததாக அஷ்வத் படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படம் பற்றிய முக்கியமான தகவலை தனியார் கல்லூரி நிகழ்வில் கொடுத்துள்ளார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

"டிராகனில் கல்வி பற்றியும், தவறு செய்துவிட்டு தப்ப முடியாது என்பது பற்றியும் பேசினோம். அதுபோல இந்தக் கதை (STR 51) சொர்க்கம் என்றால் என்ன என்பதைப் பற்றியது. அதை, கருத்து திணிப்பாக இல்லாமல் படத்தில் சொல்ல இருக்கிறோம். இப்போதைக்கு நிறைய சொல்ல முடியாது. ஆனால் இங்கு ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன், இந்தப் படத்தில் சந்தானம் இருக்கிறார். சிம்பு - சந்தானம் காம்போ இந்தப் படத்தில் இருக்கிறது. இந்த விஷயத்தை, சில செய்தி நிறுவனங்கள் தகவலாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதை இப்போது நான் உறுதிபடுத்திட்டேன்.

STR 51

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இருக்கிறார். ஹீரோயின் யார் எனச் சொல்ல முடியாது, ஏனென்றால் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை நிறைய ஹீரோயின்கள் இருப்பார்கள். இவை எல்லாம் இல்லாமல் மிக சுவாரஸ்யமான விஷயம் ஒன்று இந்தப் படத்தில் இருக்கிறது. அதை நான் இப்போது சொல்லமாட்டேன். பிறகு ஒரு தருணத்தில் சொல்கிறேன்" என்றார்.