Samantha Jailer 2
கோலிவுட் செய்திகள்

சமந்தா கல்யாணம் to `The Odyssey' டிரெய்லர் | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Samantha

இன்றைய சினிமா செய்திகளில் `ஜெயிலர் 2', சமந்தா திருமணம், The Odyssey டிரெய்லர் என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

Johnson

`ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணையும் மோகன்லால்?

Mohanlal

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் `ஜெயிலர் 2' படத்தின் ஷூட்டிங்கில் டிசம்பர் 2ம் தேதி மோகன்லால் இணைய உள்ளார் என தகவல்.

சமந்தாவுக்கு டும் டும் டும்!

Samantha, Raj

நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் திருமணம் இன்று அதிகாலை கோவையில் நடைபெற்றது.

ரியோவின் `RAMinLEELA' 

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் `RAMinLEELA' பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் வர்த்திகா நாயகியாக நடிக்கிறார்.

`அங்கம்மாள்' டிரெய்லர்

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் நடித்துள்ள `அங்கம்மாள்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

கௌதம் ராம் கார்த்திக்கின் புதிய படம்

Gautham Ram Karthick

கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன் நடிப்பில் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கும் படம் பூஜையுடன் துவக்கம். `டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.

ரவிதேஜா பட Bella Bella பாடல் 

ரவி தேஜா நடித்துள்ள `Bhartha Mahasayulaku Wignyapthi' படத்திலிருந்து முதல் சிங்கிள் Bella Bella பாடல் வெளியாகியுள்ளது.

`EPIC - First Semester' டீசர்

ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள `EPIC - First Semester' பட டீசர் வெளியீடு. இப்படத்தை 90's வெப் சீரிஸ் மூலம் பெரிய வரவேற்பை பெற்ற ஆதித்யா ஹாசன் இயக்கியுள்ளார்.

3 நாளில் 50+ கோடி

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கி வெளியான `தேரே இஷக் மே' படம், இந்தியில் மட்டும் 3 நாட்களில் 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு.

வி சாந்தாராம் பயோபிக்

பிரபல பாலிவுட் இயக்குநர் வி சாந்தாராம் பயோபிக் அவரது பெயரிலேயே உருவாகிறது. சித்தார்த் சதுர்வேதி இப்படத்தில் சாந்தாராமாக நடிக்க அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இப்படத்தை இயக்குகிறார்.

`The Odyssey' Prologue & Trailer

The Odyssey

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிவரும் `The Odyssey' படத்தின் Prologue (முன்கதை) வீடியோ டிசம்பர் 12ம் தேதி ஐமாக்ஸ் திரைகளில் வெளியாகும் எனவும், அது கிட்டத்தட்ட 6 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ எனவும் சொல்லப்படுகிறது. மேலும், படத்தின் டிரெய்லரும் டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், இவை இந்திய திரையரங்குகளில் வருமா என்பது பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லை.