Ravi Mohan Benz
கோலிவுட் செய்திகள்

LCU-வில் இணைந்த ரவி மோகன்! | Ravi Mohan | Benz | Lokesh Kanagaraj

கைதி (2019), விக்ரம் (2022) மற்றும் லியோ (2023) போன்ற படங்களைக் கொண்ட தனது புகழ்பெற்ற எல்.சி.யு (LCU) வரிசையில் இப்படமும் ஒரு பகுதியாக இணைகிறது.

Johnson

ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் படம் `பென்ஸ்'. லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகி வரும் இப்படம் LCUவின் ஒரு பாகமாக இருக்கும் என்பதை முன்பே அறிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போது இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் இணைந்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் நுழைந்திருக்கிறார் ரவி. இதனை பற்றி பதிவிட்ட லோகேஷ் ' பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து, "யுனிவர்ஸுக்கு உங்களை வரவேற்கிறோம், ரவி மோகன் சார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கைதி (2019), விக்ரம் (2022) மற்றும் லியோ (2023) போன்ற படங்களைக் கொண்ட தனது புகழ்பெற்ற எல்.சி.யு (LCU) வரிசையில் இப்படமும் ஒரு பகுதியாக இணைகிறது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கிடையில், ரவி மோகன் தற்போது தான் இயக்கும் முதல் படமான 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் . சமீபத்தில் கணேஷ் கே பாபு இயக்கிய 'கரத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அடுத்த படத்திற்காக அறிமுக இயக்குநர் ஜி.என்.டி. ஷ்யாம் குமாருடன் கைகோர்த்துள்ளார் . மேலும், 'ஜீனி' மற்றும் முன்பு 'ப்ரோ கோட்' ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.