`மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை', சந்தானம் நடித்த `குலு குலு' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' போன்ற படங்களில் வசனம் எழுதியுள்ளார்.
29வது வயதில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கையை பற்றிய படமாக உருவாகியுள்ளது இப்படம். ஷான் ரோல்டன் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் ஆர்.எஸ். சதீஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, இப்படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பேனரின் கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகியோர் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ், கார்த்திகேயன் சந்தானம் உடன் ரத்னகுமார் இணைந்து செய்திருக்கும் இந்த வீடியோவில் படம் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.