Rajinikanth X
கோலிவுட் செய்திகள்

ரஜினியின் `தர்மன்' இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்! | Rajinikanth | Dharman

ஜூன் 24ம் தேதி பூஜையுடன், இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அடுத்த நாளே (ஜூன் 25) படப்பிடிப்பு தொடங்கியது.

Johnson

ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் `தர்மன்'. சிம்ரன், ராஷி கன்னா முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஜூன் 24ம் தேதி பூஜையுடன், இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அடுத்த நாளே (ஜூன் 25) படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி  இப்படத்தின் இயக்குநராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் இத்திட்டத்திலிருந்து விலகினார். பின்னர்,  'டான்'  திரைப்பட இயக்குநர்  சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி பின்னர் அவரும் மாற்றப்பட்டு இப்போது அஸ்வத் மாரிமுத்துவின் இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.