விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெஷ்மி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி ஜூலை 3 வெளியான படம் `கட்டா குஸ்தி 2'. இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தை பார்த்துவிட்டு தொலைபேசி வாயிலாக விஷ்ணு விஷாலை பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
இது பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால் "செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெய்னர். இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல. ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், நல்ல பெர்ஃபார்மன்ஸ். ஸாரா பாப்பா, எப்படி கண்டுபிடிச்சீங்க. ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க. விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு. இன்னும் நல்ல படங்கள் நிறைய குடுங்க" என்று ரஜினிகாந்த் வாழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "நம்ம ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் கட்டா குஸ்தி - 2 படத்தை பார்த்துவிட்டு போன் செய்து பேசியத்தை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன். இந்த ஒட்டுமொத்த பயணத்தின் மிகச்சிறந்த தருணம் அவருடைய இந்த போன் கால் தான். அவருடைய இந்த வார்த்தைகள், என்னோட அடுத்தடுத்த பயணங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்து. மிக்க நன்றி சார்!" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.