ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `படையப்பா'. தற்போது அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் அதற்காக ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் SURIYA 47 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இன்று இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் ஆக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிவரும் `D54' படத்தில் தன்னுடைய காட்சிகள் நிறைவடைந்தது என நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பதிவு.
ஜி வி பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் துல்கர் சல்மான்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா நடித்துள்ள `Mana Shankara Vara Prasad Garu' படத்திலிருந்து சசிரேகா பாடல் வெளியாகியுள்ளது.
'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநர் சிதம்பரம் அடுத்து இயக்கியுள்ள `பாலன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்திற்கு `ஆவேஷம்' ஜித்து மாதவன் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர்சிங் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாக மாறியுள்ளது `துரந்தார்'. இரண்டாம் பாகத்துக்கான டீசருடன் இப்படம் நிறைவடைந்தது. `துரந்தார் 2' மார்ச் 19, 2026 வெளியாகும் என அறிவிப்பு.
தெலுங்கில் வெளியான `கிக்' படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் சல்மான் கான். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் "அடுத்ததாக `கிக் 2' படத்தில் நடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார். தற்போது `Battle of Galwan' படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான்.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார், சைஃப் அலிகான் நடிப்பில் இயங்கிவந்த `Haiwaan' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.
மிகப்பிரபலமான வெப் சீரிஸ் `The Boys' ஐந்தாவது மற்றும் கடைசி சீசனின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8ம் தேதி இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.