R B Choudary Super Good Films
கோலிவுட் செய்திகள்

சென்னை வந்த ஆர் பி சௌத்ரி உடல்... இறுதி அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்! | R B Choudary

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். ராஜஸ்தானில் இருந்து இன்று மாலை சென்னைக்கு எடுத்து வரப்பட்டது ஆர்.பி.சௌத்ரியின் உடல்.

Johnson

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தானில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மயிலாப்பூர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் தனுஷ், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி (74) நேற்று மாலை ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலியானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

R B Choudary

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். ராஜஸ்தானில் இருந்து இன்று மாலை சென்னைக்கு எடுத்து வரப்பட்டது ஆர்.பி.சௌத்ரியின் உடல். தற்போது இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் மயிலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் தனுஷ், சூர்யா உட்பட பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ஆர் பி சௌத்ரிக்கு நெருக்கமான பல நண்பர்கள் இன்னும் அஞ்சலில் செலுத்த வர இருக்கின்றனர். எனவே இன்று முழுக்க இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உள்ளது ஆர் பி சௌத்ரி உடல். நாளை காலை கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அவரின் இறுதிசடங்குகள் நடைபெற்ற உள்ளது.