Vijay TVK
கோலிவுட் செய்திகள்

"சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார்!" - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் | Vijay | TVK

தளபதி திரு.விஜய் சினிமா உலகில் வெற்றிக்கொடி கட்டியது போல, தற்போது தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம். 

Johnson

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தவெக தலைவர் விஜய்க்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளது. சினிமாவில் வெற்றி கண்ட தளபதி, இப்போது அரசியலிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பாதையில் சென்று முதலமைச்சராக சரித்திர நாயகனாக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். திரைத்துறையினர் பலரும் வாழ்த்துவது போல திரைத்துறை சங்கங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளதுன. அப்படி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்தை வெளியிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்

அதில் "தமிழக அரசியலில் மாபெரும் வெற்றியை பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள். தளபதி திரு.விஜய் சினிமா உலகில் வெற்றி கொடி கட்டியது போல, தற்போது தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் திரு.விஜய் அவர்கள் சினிமா துறையில் இருந்து முதலமைச்சராக மாபெரும் சரித்திரம் படைத்து, சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார்.

TVK

திரு.விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளது.