பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கி நேற்று வெளியான படம் `டியூட்'. `லவ் டுடே', `டிராகன்' படங்களை தொடர்ந்து பிரதீப்பின் `டியூட்' படமும் ஹிட்டாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்திருக்கிறது படம்.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் 22 கோடி (GROSS) என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "டியூட் தீபாவளி ப்ளாஸ்ட், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் சாதனை படைக்கிறது" எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்திய அளவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 11 கோடி என சொல்லப்படுகிறது.
பிரதீப்பின் முந்தைய படங்களில் `லவ் டுடே' முதல்நாள் இந்திய வசூல் 2.45 கோடியும், `டிராகன்' 6.5 கோடியும் வசூல் செய்துள்ளது. எனவே அவரின் படங்களில் முதல்நாளில் அதிக வசூல் `டியூட்' தான். `டியூட்' படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் காரணமாக, இனியும் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.