Pradeep Ranganathan Dragon 2
கோலிவுட் செய்திகள்

டி ராகவன் ரிட்டன்ஸ்... உருவாகிறது டிராகன் 2! | Dragon 2 | Pradheep Ranganathan

செல்ஃப் மேட் ஸ்டார் பிரதீப்புடன் பணியாற்றியது ஒரு ப்ளஸ்ட்டாக இருந்தது. இன்னும் பெரிதாக வளருங்கள் PR.

Johnson

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் `டிராகன்'. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி 2025ல் வெளியான படங்களில் பெரிய லாபகரமான படங்களில் ஒன்றாகவும் மாறியது. இப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து "செல்ஃப் மேட் ஸ்டார் பிரதீப்புடன் பணியாற்றியது ஒரு ப்ளஸ்ட்டாக இருந்தது. நண்பர்கள் இணைந்து பணியாற்றும் போது, நட்புக்கு சில பாதிப்புகள் வரக்கூடும். ஆனால் அதுதான் எங்களை உந்தி தள்ளியது. இன்னும் பெரிதாக வளருங்கள் PR. என்னுடைய குழுவுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி." என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் ஹீரோ பிரதீப் "நண்பனில் இருந்து இயக்குநராக ஏற்க எனக்கு கொஞ்சம் நேரம் ஆனது. ஆனால் இப்போது இரண்டிலுமே சிறந்தவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டு, கீழே இரண்டு டிராகன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விரைவிலேயே `டிராகன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது. டி ராகவன் ரிட்டன்ஸ் மக்களே!