Vignesh Shivan LIK
கோலிவுட் செய்திகள்

"எனக்காக பெரிய பட வாய்ப்பை இழந்த பிரதீப்!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி | Vignesh Shivan | LIK

ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, 'கதை சொல்லணும்' என சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனால், படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது தாமதமாகிட்டே இருந்தது.

Johnson

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசிய இயக்குநர்  விக்னேஷ் சிவன், "இந்த ஸ்டேஜ் மற்றும் நான் வாழ்க்கையில் இருக்கும் இந்த ஸ்டேஜ் இந்த இரண்டுக்குமே நான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் ஒரு மிகப்பெரிய படம் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. ஒரு கல்யாண மண்படத்தில், தாலி கட்டும் முன்பு எழுந்து சென்றுவிட்டால், அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆவது எவ்வளவு கஷ்டமோ, அந்த மாதிரி ஒரு பெரிய படம் நின்றுபோனால் பின்னர், மீண்டும் வேறு படத்தை துவங்குவது அதை நம்பவைப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

அப்போது நம் காதில் விழுவது எல்லாம் ’ஏதாவது சின்னதா பண்ணுங்க’ என்பதுதான். மறைமுகமாக நம்மை மோக பீஸாக பார்க்கிறார்கள் என்பதைத்தான் அப்படிச் சொல்வார்கள். முதல் முறை அதைச் சந்தித்தால் அது வேறு. பலமுறை சந்தித்திருந்தால் அது வேறு. எனக்கு அது பல முறை நடந்திருக்கிறது. இப்போது எனக்கும் என் ஆடியன்சுக்குமான பிணைப்புதான் இருக்கிறது. அது ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து வேலை செய்யும் என நினைக்கிறேன்.

Pradeep Ranganathan

ஒருநாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, ’கதை சொல்லணும்’ எனச் சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனால், படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது தாமதமாகிட்டே இருந்தது. அந்த சமயத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்யுறதுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதுபோல, நிறைய வாய்ப்புகளும் வந்தும், எனக்குக் கொடுத்த வார்த்தைக்காகவும், எனக்காகவும் காத்திருந்தார். என்னுடைய கடினமான சூழல்களில் உடனிருந்த பிரதீப்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன" என்றார்.