Kalki 2898 AD Part 1 Poster
Kalki 2898 AD Part 1 Poster Twitter
கோலிவுட் செய்திகள்

பிரபாஸ் - கமல்ஹாசனின் ‘கல்கி 2898 AD-1’ ரிலீஸ் தேதி மாற்றம்? இதுதான் காரணம்!

சங்கீதா

கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது ‘புராஜெக்ட் கே’ என்றப் படத்தை இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது.

மேலும், படத்திற்கு ‘கல்கி 2898 AD-1’ என்றுப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘புராஜெக்ட் கே’ என்றால் என்ன என்பது குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் சாண்டியாகோ காமிக் கான் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், அதற்காக நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ், ராணா டகுபதி உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றிருந்தனர்.

இந்நிலையில், இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மே 9 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இப்படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத்-க்கு மே 9 ஆம் தேதி சிறப்பானது என்பதால் ஜனவரியிலிருந்து மே மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

'Jagadeka Veerudu Athiloka Sundari' மற்றும் 'Mahanati' ஆகிய இருப்படங்களும் மே 9 ஆம் தேதி வெளியாகிதான் சூப்பர் ஹிட் ஆகியிருந்தது. அதனால் இப்படத்தையும் அந்த தேதியில் வெளியிட தயாரிப்பாளர் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. மேலும் வி.எஃப்.எக்ஸ் பணிகளும் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.