போர் தொழில்
போர் தொழில் Twitter
கோலிவுட் செய்திகள்

ஹவுஸ்புல் ஆகும் காட்சிகள்.. அதிகரிக்கப்பட்ட ஸ்கிரீன்கள்.. ‘போர் தொழில்’ வசூல் எவ்வளவு?

சங்கீதா

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இந்தப் படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ராட்சசன் படத்திற்கு பிறகு அதைப்போன்ற சிறந்த த்ரில்லர் படத்தை பார்த்ததாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். பாடல்கள், பெரிய அளவிலான சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் ஏதும் இல்லாமல் கதையின் கருவையும், திரைமொழியையும் மட்டுமே நம்பி மிகவும் அட்டகாசமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

போர் தொழில்

இந்நிலையில், இந்தப் படம் வெளியான 10 நாட்களில் 23.10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லாப கணக்கில் படத்தின் வசூல் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘போர் தொழில்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை அடுத்து, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடிய நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்தப் புகைப்படங்களும் வைரலாகின.

2 வாரங்களை தாண்டியும் ‘போர் தொழில்’ திரைப்படம் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பல திரையரங்குகளில் ஸ்கிரீன்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் வெளியான ஆதிபுருஷ், பொம்மை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், போர் தொழில் பக்கமே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.