எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் பார்த்திபன். இந்த நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அஜித் தன்னுடைய பேட்டியில் முதல் நாள் முதல் காட்சியை வரவேற்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
"முதல் நாள் முதல் காட்சியை வைத்துதான் ஒரு நடிகரின் ஸ்டார்ட்டம் முடிவு செய்யப்படுகிறது. அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார். அவர் அந்த பெட்டியில் சொன்னதில் எனக்கு மிக உடன்பாடான விஷயம் என்னவென்றால், என்னிடம் ஒரு தொகுப்பாளர் 4.5 ஆண்டு கால திமுக ஆட்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார். ஒருவருக்கு 5 வருடங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் நாம் 2.5 வருடத்திலேயே விமர்சிக்க அராம்பித்துவிடுகிறோம். இதே போன்ற ஒரு கருத்தை அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். 5 வருடங்களை கொடுத்துவிட்டோம் என்றால், முழுமையாக ஆட்சி புரியட்டும். அதில் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் வரும் தேர்தலில் அதை நாம் காட்டலாம் என அவர் கூறியது பிடித்திருந்தது. அவர் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, சீட்டை கிழிப்பது, அபிஷேகம் என்ற பெயரில் நடப்பது இதை எல்லாம் ஏன் கூறுகிறார் என்றால், கூட்ட நெரிசலால் நிகழ்ந்த இழப்புகளை மனதில் வைத்து இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என பேசி இருக்கிறார். எல்லாருடைய பார்வைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதேபோல் அவர் பார்வைக்கும் மரியாதை இருக்கிறது."
அதே பேட்டியில், கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் காரணம் இல்லை என்று கூறி இருக்கிறாரே?
விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது, நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அதன் உள் அர்த்தங்களை அரசியல் ஆக்காமல், 41 உயிர்கள் நமக்கு திரும்ப கிடைக்காது, எனவே மறுபடி அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த பதிலில் நான் புரிந்து கொள்ளும் விஷயம்.
விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் போய் பார்க்காமல், இங்கு அழைத்து வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
நானாக இருந்தால் கிளம்பி போயிருப்பேன் என்றெல்லாம் நாம் யோசிக்கலாம். ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியமா? மறுபடி அது பாதிப்பை ஏற்படுத்துமா? மறுபடி அவர் அனுதாபம் தெரிவிக்க போனால் கூட கூட்டம் வந்துவிடுமோ என்ற யோசனை வரும். இதுதான் சரி, அது தவறு என்று இல்லை. அவருக்கு அது சரி எனப்படுகிறது, அதை செய்கிறார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் வேண்டியது.