Pandiraj Warrant
கோலிவுட் செய்திகள்

"உதயநிதி சாரிடம் போய் கிரிக்கெட் டிக்கெட் கேட்டு.." சிஷ்யனை கலாய்த்த பாண்டிராஜ் | Warrant

'எஜமான்' படத்தில் நெப்போலியன் `கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்' எனச் சொல்வாரே அதுபோல நல்லதோ, கெட்டதோ அவனைப் பற்றிப் பேசினால், ரசிப்பான்.

Johnson

`ப்ரூஸ் லீ', `மாமன்' படங்கள் மற்றும் `விலங்கு' வெப் சீரிஸ் போன்றவற்றை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ். தற்போது இவர் கதைநாயகனாக நடித்துள்ள வெப் சீரிஸ் `வாரண்ட்'. இந்த சீரிஸ் 22ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநரும், பிரசாந்த்தின் குருவுமான பாண்டிராஜ், "பொதுவாக, ஒருவரை கலாய்த்தால் அடுத்த நிகழ்வுக்கு நம்மைக் கூப்பிட மாட்டார்கள். `புரூஸ் லீ' படத்தில் பயங்கரமாக கலாய்த்தேன், `மாமன்'க்கு கூப்பிட மாட்டான் என நினைத்தேன், ஆனாலும் கூப்பிட்டான். அதில் அதைவிட கலாய்த்தேன், இப்போதும் கூப்பிட்டிருக்கி்றான். அவனுக்கு கலாய்க்கிறது மிகவும் பிடிக்கும். அவன் படத்தையே அவன் கலாய்த்துக்கொள்வான். அவனைப்பற்றி பேச வேண்டும் என நினைப்பான். ’எஜமான்’ படத்தில் நெப்போலியன் `கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்' எனச் சொல்வாரே அதுபோல நல்லதோ, கெட்டதோ அவனைப் பற்றி பேசினால், ரசிப்பான்.

இவன் எப்படிப்பட்ட ஆள் என்றால், சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தது. ’பிரபல டிவி ஒன்றில் கேட்டு டிக்கெட் வாங்கிக் கொடுங்கள்’ எனக் கேட்டான். இதெற்கெல்லாம் போய் எப்படி அவர்களிடம் கேட்பது என விட்டுவிட்டேன். ஆனால் அவன் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கேட்டு டிக்கெட் வாங்கிவிட்டேன் என்றான். உதயநிதி சாரிடம் கேட்டு டிக்கெட் வாங்கி விட்டான். பெரிய விஷயங்களைக் கேட்கவே நாம் தயங்குவோம். ஆனால் இவன் டிக்கெட் கேட்பது மாதிரியான ஆள்.

டிசம்பர் மாதம் ஆபீசுக்கு வந்தான். ’சின்ன வெப் சீரியஸ் செய்கிறோம் சார், அதில் நான் ஒரு ரோல் நடிக்கிறேன்’ என்றான். அந்த ரோல் பாலசரவணன் நடிக்க வேண்டியது. அவரது தேதி கிடைக்கவில்லையா, அவர் தேதி இல்லாதபோது இவன் நடிக்க கமிட் ஆனானா என தெரியவில்லை. பாலசரவணன் புலம்பி தள்ளிவிட்டார். கூட இருக்கும் நண்பர்களே இப்படிச் செய்கிறார்கள் என அதனை எக்ஸ் தளத்தில் பதிவாகவும் போட்டார்.

Pandiraj

இவன் சும்மா இல்லாமல் அதனை ரீ போஸ்ட் செய்கிறான். சரி, இதை விடலாம் என்றால், நான் ஒரு மாஸ் ஹீரோவுக்காக ஒரு கதை செய்து வைத்திருக்கிறேன். கவின், SK போல ஒருவர் நடிக்கும் கதை. அதில் நான் நடிக்கிறேன் என கேட்கிறான். நான் எழுதி தருகிறேன், இன்னும் 5 - 10 வருடத்தில் திருச்சி தொகுதியில் அவன் எம்எலஏவாக நிற்பான் பாருங்கள்" என்றார்.