Vijay Sethupathi Bigg Boss 10
கோலிவுட் செய்திகள்

பிக்பாஸ் சீசன் 10.. வெளியான புதிய புரோமோ! | Bigg Boss 10 | Vijay Sethupathi

இந்த சிறப்பு தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர்.

Johnson

இந்திய தொலைக்காட்சி பொறுத்தவரை பிக் பாஸ் மிகப்பெரிய கவனத்தை குவித்தது. தமிழிலும் இதுவரை 9 சீசன்களாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை பிரபலமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்வில் இப்போது சாமானியர்களுக்கு கலந்து கொள்ளும் வண்ணம் தயாராகி வருகிறது ‘Common Man’ பிக் பாஸ் தமிழ் 10. தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் இடம்பிடிக்கும் இறுதி சிலரைக் கண்டறியும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay Sethupathi

இந்த சிறப்பு தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர். மாயா கிருஷ்ணன், இந்த ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைந்து, இந்த அத்தியாயத்திற்கு வழிகாட்டுகிறார். பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த லாஞ்ச் புரோமோ மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி வரவேற்கிறார். பிக் பாஸ் Common Man, 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்குடன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சீசனாக அமையவுள்ளது. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் விரைவில், ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது.