Rajiv Menon KH x RK
கோலிவுட் செய்திகள்

உயரத்தை சரி செய்ய சொன்னதும் ரஜினி சார் செஞ்ச விஷயம்! - ராஜீவ் மேனன் | KH x RK | Nelson

நான் கமல்ஹாசனுடன் சில விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் முதல் முதலாக ரஜினிகாந்த் உடன் பணியாற்றுகிறேன். அவர்கள் இருவரும் நடந்து வரும் காட்சி, ஆனால் ஒரே சிங்கில் அவர்களால் நடந்து வர முடியவில்லை.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் ராஜீவ் மேனன், நெல்சன் இயக்கிய ரஜினி–கமல் புரோமோ ஷூட் அனுபவத்தை பகிர்கிறார். நெல்சனின் பிளாக் ஹூமர், அவரின் 20 டேக் பழக்கம், ரஜினி–கமல் நடக்கும் காட்சிக்காக எடுத்த முயற்சிகள், உயரம் சமமாக இருக்க ரஜினி செருப்பு கழற்றி நின்ற சம்பவம் மூலம் ரஜினியின் தொழில்முறை காதலை அவர் வலியுறுத்துகிறார்.

தமிழ் சினிமாவின் முதன்மை ஒளிப்பதிவாளர்கள் ஒருவர் ராஜீவ் மேனன். சினிமாவில் இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர், விடுதலை படம் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சமீபத்தில் வெளியான `பேட்ரியட்' படத்திலும் நடித்திருந்தார். அப்படம் குறித்தான பேட்டியில் இவர் ஒளிப்பதிவாளராக ரஜினி - கமல் இணையும் படத்தின் புரோமோ படம்பிடித்ததை பற்றி பகிர்ந்திருந்தார்.

அதில் "நெல்சனின் டாக்டர், ஜெயிலர் படங்கள் எனக்கு பிடிக்கும். பொதுவாக எனக்கு ஹூமர் பிடிக்கும் நெல்சனின் படங்களில் ஒரு ப்ளாக் ஹூமர் இருக்கும். மணிரத்னத்தை சந்தித்த நெல்சன் எனக்கு அடுத்த படத்தில் புதிய ஒரு லுக் தேவை என சொல்லி இருக்கிறார், நீங்கள் ராஜீவிடம் கேளுங்கள் என மணி சொல்லி இருக்கிறார். அவர் சம்மதிப்பாரா என நெல்சன் தயங்க, நீங்கள் கேட்டால் தானே தெரியும் என அனுப்பி வைத்தார் மணி. அவரும் என்னிடம் வந்து கதை சொன்னார். அவர் என்னிடம் டிஜிபி அல்லது கமிஷனர் ரோலில் நடிக்க கேட்டு வந்திருக்கிறாரோ என நினைத்தேன். 

அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. கதை சொல்லி முடித்ததும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய முடியுமா எனக் கேட்டார், நிச்சயமாக என சம்மதித்தேன். ஆனால் ஒரே வாரத்தில் நாம் ப்ரோமோ ஷூட் செய்ய வேண்டும் எனக் கூறினார். அடுத்த சில நாட்களில் எல்லாம் தயாரானது. நான் கமல்ஹாசனுடன் சில விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் முதல் முதலாக ரஜினிகாந்த் உடன் பணியாற்றுகிறேன். அவர்கள் இருவரும் நடந்து வரும் காட்சி, ஆனால் ஒரே சிங்கில் அவர்களால் நடந்து வர முடியவில்லை. அது சரியாக வர 20 டேக் எடுத்தோம். அவர்கள் நடந்து வருவதை பார்க்கையில் மிக ஸ்டைலாக இருந்தது. அவர்களுக்கு என ஒரு வசீகரம் உண்டு. பின்னர் அடுத்த காட்சியை துவங்கினோம். 

kamal, rajini

அப்போது தான் தெரிந்தது நெல்சன் எல்லா காட்சியையும் 20 டேக் எடுக்கிறார். அது அவர் நடிக்கும் காட்சி என்றாலும் கூட. பின்னர் இருவருக்குமான Faceoff காட்சியை எடுத்தோம். அதில் இருவருக்கும் உயரம் சமமாக இல்லை என்பதால், ஸ்டூல் போடுவதற்காக கட்டையை தேடினோம். அதை பார்த்த ரஜினி சார் `என்ன என்ன... இருங்க' என அவரது ஷூவை கழற்றிவிட்டு நின்றார். உயரம் சமமாக இருந்தது. அதுதான் சினிமா மீது அவருக்கு இருக்கும் காதல். இந்த வயதிலும் அவர்களால் ஜென் ஸி தலைமுறையினரிடம் சேர முடிகிறது. நான் பெரிய பெரிய படங்கள் செய்த போது விட, இந்த ஒரு ப்ரோமோ செய்ததற்கு நிறைய போன் கால் வந்தது." என்றார்.