Nayanthara, Kavin Hi
கோலிவுட் செய்திகள்

தள்ளிப்போகிறது நயன்தாரா, கவினின் `ஹாய்'.. காரணம் என்ன? | Hi | Nayanthara | Kavin

இப்படம் முதலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 28க்கு தள்ளிப் போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Johnson

நயன்தாரா, கவின் நடிப்பில் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள படம் `ஹாய்'. இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

இப்படம் முதலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 28க்கு தள்ளிப் போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி சூர்யாவின் `விஸ்வநாத் & சன்ஸ்' படமும், விஷாலின் `மகுடம்' படமும் வர உள்ளது. இதனால்தான் `ஹாய்' படம் புதிய தேதியில் வருகிறது எனச் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ்.லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில், "பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது.

Nayanthara, Kavin

சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களைப் பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.