Atharva Idhayam Murali
கோலிவுட் செய்திகள்

'பொட்டு வைத்த வட்ட நிலா'வுக்கு குடும்பமே எமோஷனல் ஆகிடுச்சு! - அதர்வா | Atharva | Idhayam Murali

இது எடிட் டேபிளில் உருவான படம். ஏனென்றால் இந்தப் படத்தில் நானே 4 மணி நேரம் டப்பிங் செய்திருக்கிறேன்.

Johnson

அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வெளியான படம் 'இதயம் முரளி'.  இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை (ஜூலை.17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதர்வா "பள்ளிக்கூட ரியூனியன் போன்ற உணர்வு தான் வருகிறது. முதன்முறை இயக்குநர் ஆகாஷ் என்னை சந்தித்து கூறிய விஷயங்களை படத்தில் கொண்டு வந்துவிட்டோம் என நம்புகிறேன். இப்போது தயாரிப்பாளர் ஆகாஷுக்கு நன்றி, இப்படி ஒரு கலர் ஃபுல் படத்தை கொடுத்ததற்கு நன்றி. இது போன்ற ஒரு படத்துக்கு முக்கியம் ஒளிப்பதிவு. அதனை மனோஜ் சார் மற்றும் சாய் மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். எல்லோரையும் லட்டு மாதிரி காட்டுவேன் என சொன்னார்கள். அதை செய்துவிட்டார்கள்.

இந்தப் படத்தைச் சிறப்பாக எடிட் செய்த பிரதீப்புக்கு நன்றி. இது எடிட் டேபிளில் உருவான படம். ஏனென்றால் இந்தப் படத்தில் நானே 4 மணி நேரம் டப்பிங் செய்திருக்கிறேன். அதையெல்லாம் நாம் படமாக ரிலீஸ் செய்திருக்க முடியாது. தமன் சார் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்திருக்கிறார். நடிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் கேரவனில் சென்று இசையமைத்துவிட்டு வருவார். சின்னி ஜெயந்த் சார் என் அப்பாவின் மிக நெருங்கிய நண்பர். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அவர் இந்தப் படத்தில் ஒரு லைன் சொன்னது உண்மையில் என் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. குறிப்பாக 'பொட்டு வைத்த வட்ட நிலா' அந்தப் பாடல் போடும்போது நான் மட்டும் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் எமோஷனலாகிவிட்டோம்.

இந்த 'இதயம் முரளி' டீமை எல்லோரும் மிஸ் செய்வோம். நடிக்க வந்த இடத்தில் எல்லோரும் நெருக்கமாகி விட்டோம். எல்லோரும் ஒரே குரூப்பாக மாறிவிட்டோம். படப்பிடிப்பில் லன்ச் எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம். இந்த டைட்டில் வைக்கும்போது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஆகாஷ், 'என்னை நம்புங்கள்; கண்டிப்பாக நன்றாக வரும்' என்று சொன்னார். அந்த வகையில் எனது இயக்குநர் ஆகாஷிற்கு நன்றி. அதை அவர் நிரூபித்துவிட்டார். எங்கள் அப்பாவிற்குச் சின்ன ட்ரிப்யூட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நண்பராக வந்து ஆகாஷ் அதைச் செய்துவிட்டார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய உங்களுக்கு எல்லோருக்கும் நன்றி" என்றார்.