Mutta Kalakki Youth
கோலிவுட் செய்திகள்

ட்ரெண்ட் ஆகாது என சொல்லப்பட்ட `Mutta Kalakki'... 100 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை! | Youth

இப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளியானது `முட்ட கலக்கி'. வீடியோ பாடலாகவே வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் படத்தை கொண்டு போய் சேர்த்தது. ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லா இடங்களிலும் பாடல் ட்ரெண்ட் ஆனது. 

Johnson

கென் கருணாஸ் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமான படம் `யூத்'. இதில் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷிமா, மீனாக்ஷி எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்றது. ஜி வி பிரகாஷ்குமார் இசையில் இப்படத்தின் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானது. இப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளியானது `முட்ட கலக்கி'. வீடியோ பாடலாகவே வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் படத்தை கொண்டு போய் சேர்த்தது. ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லா இடங்களிலும் பாடல் ட்ரெண்ட் ஆனது. 

Youth

இப்போது இந்த முக்க கலக்கி பாடல் யூட்யூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் இதுவரை அதிக பார்வைகளை கடந்த பாடல் `மாரி 2' படத்தில் இடம்பெற்ற `ரௌடி பேபி'. 1.7 பில்லியன் (170 கோடி). அதற்கடுத்த இடங்களில் அரபிக் குத்து (78+ கோடி), மால டம் டம் (71 கோடி), ஒய்திஸ் கொலவெறி (58+ கோடி). பத்தாவது இடத்தில் ரகிட ரகிட (40+ கோடி) உள்ளது. இப்பட்டியலில் விரைவில் `முட்ட கலக்கி' பாடலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`யூத்' பட பாடல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறிய இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் "முதலில் ஒரு ஆடியோ லேபிளுக்கு `யூத்' பட பாடலை காட்டும் போது அறிமுக ஹீரோ படம் என்பதால் ரொம்ப கம்மியான விலைக்கு வாங்குவதாக சொன்னார்கள். நான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரு சின்ன பையன் தான் ஹீரோ என்பதால் அந்த விலை. அந்தப் படத்தையே ரொம்ப கம்மியாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் வைரலாக எந்தப் பாடலும் இருக்காது என நினைக்கிறோம் என்றார்கள். சரி இதை நான் என்னுடைய லேபிளில் வெளியிடுகிறேன் என சொல்லி முட்டக் கலக்கி பாடலை வெளியிட்டோம். அது மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் படத்தையும், ஆல்பத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். அதன் பின்னர் எந்த லேபிள் இந்தப் பாடலை வேண்டாம் என சொன்னார்களோ, அதே லேபிள் திரும்ப வந்து அவர்கள் சொன்னதை விட ஐந்து மடங்கு அதிக விலை தருகிறோம் என சொன்னார்கள். ஆனால் நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம்." என்றார்.