தமிழ் சினிமாவில் பல்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து வருகிற கார்த்தி, தனது 30வது படமாக மோகன் ராஜா இயக்கும் புதிய பிரம்மாண்ட குடும்ப-அனுபவ-வீரத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ மூலம் பெயர் பெற்ற மோகன் ராஜா, வேலைக்காரன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மூலம் தனது 25வது ஆண்டு சாதனையை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் விதவிதமாக கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்ததாக `சர்தார் 2' செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தாக `மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் `MAD' என்ற ஹிட் படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி. இது கார்த்தியின் 30வது படமாக உருவாகிறது.
இப்போது அவர் நடிப்பில் உருவாகும் படம் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது. 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'வேலாயுதம்' மற்றும் 'தனி ஒருவன்' போன்ற படங்களுக்காக புகழ்பெற்ற இயக்குநர் மோகன் ராஜா, இந்த அறிவிப்பின் மூலம் திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடுகிறார்.
வேலைக்காரன் படத்துக்கு பின்னர் 9 ஆண்டுகள் கழித்து மோகன்ராஜா இயக்கவுள்ள படம் என்பதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நட்சத்திர பட்டாளமும், வலுவான தொழில்நுட்ப குழுவும் இடம்பெறவுள்ளன; இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது.