Made in Korea, Kenatha Kanom x pages
கோலிவுட் செய்திகள்

யோகிபாபுவின் `கெணத்த காணோம்' to `Made in Korea'.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் தியேட்டரில் யோகிபாபுவின் `கெணத்த காணோம்', ஓடிடியில் ப்ரியங்கா மோகனின் `Made in Korea'  உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: One Piece Season 2 (English) Netflix - Mar 10

One Piece Season 2

காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் சீரிஸாக பெரிய வரவேற்பு பெற்ற ஒன்பீஸ், லைவ் ஆக்ஷன் சீரிஸ் ஆக வந்து வரவேற்பு பெற்றது. இப்போது அதன் இரண்டாவது சீசன் வருகிறது. கடற்கொள்ளையர்கள் பின்னணியில் மாயஜாலம் நிறைந்த கதை தான் இது.

Scarpetta (English) Prime - Mar 11

Scarpetta

Nicole Kidman நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ் `Scarpetta'. Forensic நிபுணர் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுவதே கதைக்களம்.

OTT: Made in Korea (Tamil) Netflix - Mar 13

Made in Korea

ரா.கார்த்திக் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன் நடித்துள்ள படம் `Made in Korea'. செம்பவளம் தன் கனவு நாடான கொரியாவுக்கு செல்வதும் அங்கு அவள் சந்திக்கும் சிக்கல்களுமே கதை.

Post Theatrical Digital Streaming: Pennu Case (Malayalam) Prime - Mar 10

Pennu Case

நிகிலா விமல் நடித்துள்ள படம் `Pennu Case'. திருமணத்தை வைத்து பல மோசடிகளை செய்யும் ஒரு பெண்ணின் கதை.

Lockdown (Tamil) Prime - Mar 11

Lockdown

அனுபமா பரமேஸ்வரன் நடித்த படம் `Lockdown'. ஒரு பெண் மிக முக்கியமான விஷயமாக வெளியே சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது கொரோனா லாக்டவுன் அமலாகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

Nawab Cafe (Telugu) Etv win - Mar 12

Nawab Cafe

ப்ரமோத் ஹர்ஷா இயக்கிய படம் `Nawab Cafe'. ஒரு தந்தை மகனுக்கு இடையே இருக்கும் சிக்கலே கதை.

Pookie (Tamil) Zee5 - Mar 13

Pookie

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷன், தனுஷா நடித்த படம் `பூக்கி'. ஒரு காதல் ஜோடிக்கு வரும் சிக்கல்களே கதை.

Couple Friendly (Telugu) Prime - Mar 13

Couple Friendly

அஷ்வின் சந்திரசேகர் இயக்கிய படம் `Couple Friendly'. புதிய நகரத்தில் அடையாளத்துக்காக போராடும் இருவரின் கதை.

Funky (Telugu) Netflix - Mar 13

Funky

அனுதீப் இயக்கத்தில் விஷ்வக் சென், கயாடு லோஹர் நடித்த படம் `Funky'. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது.

Bhartha Mahasayulaku Wignya (Telugu) Zee5 - Mar 13

Bhartha Mahasayulaku Wignyapthi

ரவிதேஜா, ஆஷிகா, டிம்பிள் ஹயாத்தி நடித்த படம் `Bhartha Mahasayulaku Wignya'. இரு பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோ சமாளிக்கும் சிக்கல்களே கதை.

Pennum Porattum (Malayalam) Netflix - Mar 13

Pennum Porattum

ராஜேஷ் மாதவன் இயக்கிய படம் `Pennum Porattum'. நாய்க்கும், ஊர் மக்களுக்கும் இடையே நடக்கும் மோதலே படம்.

Theatre: Kenatha Kanom (Tamil) - Mar 13

Kenatha Kanom

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் `கெணத்த காணோம்'. தண்ணீர் பிரச்னை காரணமாக ஊர் மக்கள் சேர்ந்து கிணறு வெட்ட, அதிலிருந்து கிளம்பும் பிரச்னையே கதை

Kolaiseval (Tamil) - Mar 13

Kolaiseval

கலையரசன், தீபா பாலு நடித்துள்ள படம் `கொலைச்சேவல்'. கர்ப்பமாய் இருக்கும் மனைவியுடனும், குடும்பத்துடனும் குலசாமி கும்பிட செல்லும் ஹீரோவின் கதை.

Anthony (Tamil) - Mar 13 

Anthony

சுகிர்தன் கிருஸ்துராஜா இயக்கியுள்ள படம் `அந்தோணி'. ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய  கதை.

Vengeance (Tamil) - Mar 13 

Vengeance

அபர்ணதி நடித்துள்ள படம் `Vengeance'. ஒரு பெண் செய்யும் மர்மமான விஷயங்கள் பற்றிய கதை.

Vowels (Tamil) - Mar 13

Vowels

ஐந்து இயக்குநர்கள் சேர்ந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் `Vowels'. காதல் என்ற தீம் சம்பந்தப்பட்டு ஐந்து கதைகள் சொல்லப்படுகிறது.

Iron Lung (English) - Mar 13

Iron Lung

Mark Fischbach இயக்கி நடித்துள்ள படம் `Iron Lung'. ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ளது. 

Reminders of Him (English) - Mar 13

Reminders of Him

Maika Monroe நடித்துள்ள படம் `Reminders of Him'. ஒரு அசம்பாவிதனத்தினால் சிறை செல்லும் ஹென்னா, மீண்டும் தன மகளுடன் இணைய எடுக்கும் முயற்சிகளே கதை.