Charlie Cox நடித்துள்ள சீரிஸ் `Daredevil: Born Again'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகிறது. நகரத்தை காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான் களம்.
Riz Ahmed நடித்துள்ள சீரிஸ் `Bait'. ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திற்கு ஆடிஷன் செல்லும் ஒரு நடிகரின் கதை.
Camila Morrone நடித்துள்ள சீரிஸ் `Something Very Bad Is Going to Happen'. ரேச்சல் - நிக்கிக்கு ஒரு வாரத்தில் திருமணம். இதற்குள் நடக்கும் சில பிரச்சனைகளே கதை.
மணிகண்டன் - அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீரிஸ் `காட்டான்'. உடல் இல்லாமல் துண்டாக கிடைக்கும் தலை யாருடையது என விசாரிக்கும் காவலர்கள் செல்லும் பயணமே கதை.
Vicky Jewson இயக்கியுள்ள படம் `Pretty Lethal'. நடனப்போட்டிக்கு செல்லும் ஒரு குழுவின் பேருந்து பிரேக் டவுன் ஆன பின் நடக்கும் சம்பவங்களே கதை.
சைஜு குரூப், சன்னி வெய்ன் நடித்துள்ள படம் `Written & Directed by God'. கடவுளை சந்திக்கும் ஒரு சினிமா இயக்குநர் எதிர்கொள்ளும் மாற்றங்களே கதை.
Jess Varley இயக்கியுள்ள படம் `The Astronaut'. விண்வெளியில் இருந்து திரும்பும் விண்வெளி வீராங்கனை எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.
Chris Pratt, Rebecca Ferguson நடித்துள்ள படம் `Mercy'. தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்படும் கணவனுக்கு, தான் குற்றமற்றவர் என நிரூபிக்க 90 நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. அதற்குள் நடக்கும் விஷயங்களே கதை.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்த படம் `சப்தம்'. சத்தத்தின் மூலமாக பல கொலைகள் நடக்க, அதன் மர்மத்தை கன்டுபிடிக்க முயலும் ஹீரோவின் கதை.
சுரேந்தர் இயக்கிய படம் `மாயபிம்பம்'. ஒரு காதலில் வரும் சிக்கல்கள் பற்றிய கதை.
ரஜிஷா விஜயன் நடித்த படம் `Masthishka Maranam'. சைன்ஸ் ஃபிக்ஷன் உலகில் நடக்கும் ஒரு எமோஷனல் கதை.
ஜீத்து ஜோசப் இயக்கிய படம் `Valathu Vashathe Kallan'. காவலதிகாரி ஆண்டனி சேவியர் ஒரு உண்மையை கண்டுபிடிக்க முயல்வதே கதை.
ராணி முகர்ஜி நடித்த படம் `Mardaani 3'. இம்முறை காவலர் சிவாஜி ஷிவானி ராய் தீர்க்கும் வழக்கு என்ன என்பதே கதை.
ஹர்ஷ், ஸ்ரீதேவி நடித்துள்ள படம் `Band Melam'. சிறு வயதில் பிரிந்த கிரி - ராஜி மீண்டும் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.
நிவின் பாலி நடித்துள்ள படம் `Prathichaya'. தந்தையின் அரசியல் செல்வாக்கை காக்கும் பொறுப்பு மகனுக்கு வரும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.
ஜிவி பிரகாஷ், கௌரி ப்ரியா நடித்துள்ள படம் `ஹேப்பி ராஜ்'. தன் குடும்பத்தையும், காதலியின் குடும்பத்தையும் சமாளிக்கும் ஹீரோவின் கதை.
சுதர்ஷன், அர்ச்சனா நடித்துள்ள படம் `Nee Forever'. தங்களுடைய சுய நலத்துக்காக காதலிக்கும் இருவரின் கதை.
ஆர்யா பாலக், சாந்தினி, ஃபிரெட்ரிக் நடித்துள்ள படம் `Satan: The Dark'. அஸ்தினாபுர கிராமத்தின் அமானுஷ்யங்களே கதை.
Ryan Gosling நடித்துள்ள படம் `Project Hail Mary'. பூமிக்கு வரும் ஆபத்தை சரி செய்ய விண்வெளி செல்லும் நாயகனின் கதை.
Zazie Beetz நடித்துள்ள படம் `They Will Kill You'. வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்ணுக்கு வரும் ஆபத்தும், அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதுமே கதை.