Mammootty Youth
கோலிவுட் செய்திகள்

’யூத்’ பட நடிகரை குறிப்பிட்டுப் பேசிய மம்மூட்டி! | Youth | Mammootty

`நான் சினிமாவுக்குப் பொருத்தமான ஆள் கிடையாதது, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. எதற்காக இதெல்லாம் முயற்சிக்கிறாய்' என்று என்னுடைய அப்பா கிண்டல் செய்வார்.

Johnson

மோகன்லால் - மம்மூட்டி இணைந்து நடித்துள்ள படம் `பேட்ரியாட்'. மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில் மம்மூட்டியிடம் `நடிப்பில் இன்னும் நிறைய தேடல் உங்களுக்கு இருப்பதாகச் சொல்லி இருந்தீர்களே’ என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன மம்மூட்டி கென் கருணாஸ் இயக்கிய `யூத்' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்வை குறிப்பிட்டுப் பேசினார்.


அந்நிகழ்வு பற்றி மம்மூட்டி கூறுகையில், "சமீபத்தில் `யூத்' என்ற ஒரு படத்தின் சக்சஸ் மீட் பார்த்தேன். நிறைய குழந்தைகள் பேசினார்கள். அதில் ஒரு பையன் (அபிஷன் தேவராசா (எ) சின்ன தமிழா) வந்து பேசுகையில் அவனுக்கு சந்தோஷமும் வருகிறது, சங்கடமும் வருகிறது. `நான் சினிமாவுக்குப் பொருத்தமான ஆள் கிடையாது, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. எதற்காக இதெல்லாம் முயற்சிக்கிறாய்' என்று என்னுடைய அப்பா கிண்டல் செய்வார்.

ஆனால், கடைசியில் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்று பயங்கர எமோஷனலாக பேசும் ஒரு தருணம் வந்தது. ஆனால் எங்களுக்கு அப்படி பேசுவதற்கான தருணம் கிடைக்கவில்லை. நாங்கள் நடிக்க வந்தது முதல் அந்த பேரார்வம், பசி இருக்கிறது. அந்தப் பையனுக்கு நடிப்பின் மீது எவ்வளவு ஆசை உள்ளதோ அதே அளவுக்கான ஆசை எனக்கும் இப்போது வரை உண்டு" என்றார். இந்த வீடியோவைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர் கென் கருணாஸ் மற்றும் அபிஷன் தேவராசா.