விஜய் Twitter
கோலிவுட் செய்திகள்

”ரெடியா.. நான் ரெடி” - ஆட்டத்துக்கு ரெடியாகும் ‘லியோ’ டீம் - முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்கள் என்றாலே பாடலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

சங்கீதா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யின் 67-வது படமாக உருவாகி வரும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சென்னையை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஒன்றரை மாத காலமாக காஷ்மீரில் 500 பேர் கொண்ட குழுவுடன் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

Vijay

இந்தப் படத்தில், விஜய்யுடன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் முதல் பாடல் வருகிற 22-ம் தேதி வெளியாவதாக புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் படங்கள் என்றாலே பாடலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதுவும் ஓபனிங் பாடலுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.

கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது ‘நா ரெடி’ பாடல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.