கன்னடத்தில் `ஆ கராள ராத்திரி' படம் மூலம் புகழ்பெற்றவர் தயாள் பத்மநபான். இவர் தெலுங்கில் `அனகனகா ஒ அதிதி', தமிழில் `கொன்றால் பாவம்', `மாருதிநகர் காவல்நிலையம்' போன்ற படங்களை இயக்கினார். இப்போது உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். இப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறனர். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதுடன், தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிரமாக நடைபெற உள்ளது.
இப்படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறுகையில், "இந்தப் படம் ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது" என்றார்.