Vetri  Lakshmikanthan Kolai Vazhakku
கோலிவுட் செய்திகள்

`லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பட கதாபாத்திர அறிமுக வீடியோ! | Lakshmikanthan Kolai Vazhakku

இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ, படம் குறித்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த வீடியோவை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Johnson

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'. இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், 'பருத்தி வீரன்' சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ, படம் குறித்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இந்த வீடியோவை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளில் இறங்கியுள்ளது. படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.